'தலிபானின் தந்தை' எனப்படும் பாகிஸ்தான் எம்.பி படுகொலை

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 08:51 am
father-of-taliban-pakistan-senator-murdered

தலிபானின் தந்தை என்று அழைக்கப்படும், பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர் மவுலானா சமியுல் ஹக், ராவல்பிண்டியில் உள்ள அவரது ஓட்டல் அறையில் வைத்து கொலை செய்யப்பட்டார். 

பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினரான மவுலானா சாமியுல் ஹக், புகழ்பெற்ற மத போதகரும் ஆவார். தலிபான் அமைப்பின் முக்கிய புள்ளிகளுடன் நெருக்கமான உறவு வைத்திருந்ததால், தலிபானின் தந்தை என அழைக்கப்பட்டார். இஸ்லாமிய கடவுளை அவமதித்ததாக மரண தண்டனை வழங்கப்பட்ட ஆசியா பீபீ என்ற பெண்ணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. 

பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், கடவுளை அவமதித்தலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோன்ற ஒரு போராட்டத்தில் மவுலானா சமியும் கலந்து கொள்வதாக இருந்தது. அறையில் அவர் தூங்கி கொண்டிருந்த போது, அவரது பாதுகாவலர் வெளியே சென்றிருந்த நேரம் சில மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர். பலமுறை கத்தியால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 வயதான மவுலானா சமி, தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நின்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close