ஆசியா பீபீயை காப்பாற்ற இத்தாலி முயற்சி!

  shriram   | Last Modified : 07 Nov, 2018 09:47 pm
italy-working-discreetly-to-protect-asia-bibi

இஸ்லாமிய கடவுளை தவறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீபீயின் பாதுகாப்புக்காக இத்தாலி அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டு, இஸ்லாமிய கடவுளை தவறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீபீக்கு மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரை விடுவிக்க கோரிக்கைகள் எழுந்தன. அதேநேரம், அவரை தூக்கிலிடவும் அடிப்படைவாதிகள் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், கடந்த வாரம் பீபீயை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பீபீ வெளியே வந்தால், அவரது உயிருக்கு போராட்டக்காரர்களால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பீபீக்காக வாதாடிய வழக்கறிஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பாதுகாப்புக்காக நெதர்லாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்நிலையில், பீபீயையும், பாதுகாப்பாக வேறு நாட்டுக்கு கொண்டு செல்ல ஐநா முயற்சி எடுத்து வருவதாக கூறப்பட்டது. அதேபோல, இத்தாலி அரசும், பீபீயின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டில் கூட இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. பெண்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆபத்தான நிலையில் இருக்க கூடாது" என இத்தாலியின் துணை பிரதமர்  மட்டேயோ சால்வினி தெரிவித்தார். 

மேலும், "மற்ற மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து, ரகசியமாக பணியாற்றி வருகிறோம். அவரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்க இது அவசியமாகும்" என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close