சார்க் மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்கிறது பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 03:20 am
modi-to-be-invited-to-saarc-pakistan

பாகிஸ்தானில் நடைபெறும் 20வது சார்க் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மொஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். 

2016ம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளப்போவதில்லை என கூறியது. இந்தியா பின்வாங்கிய பிறகு, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகளும், மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தன. இதைத்  தொடர்ந்து, சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மொஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றபோது, இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். சமீபத்தில், பாகிஸ்தானில் உள்ள குருத்வாராக்களுக்கு இந்திய சீக்கியர்கள் சென்று வழிபட, கர்தர்பூரில் இரு நாடுகளும் சேர்ந்து சாலை அமைத்து வருகின்றன. இந்த சூழலில் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close