பாகிஸ்தான் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 22 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 06:02 pm
pakistan-arrests-22-indian-fishermen-for-allegedly-straying-into-country-waters

 

அரபிக்கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது அவர்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் கடற்படையினர் மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று இந்தியாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கராச்சி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு அவர்களை லந்தி கிளைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இன்று நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இந்த மாத துவக்கத்தில் 24 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close