புகையிலைப் பொருள்கள் மீது 'பாவ வரி' விதிக்கும் பாகிஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:00 am
pakistan-government-to-impose-sin-tax-on-tobacco

புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியை பாவ வரியாக மாற்றி 10 சதவீதம் அதிகமாக விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் வரித் தொகை சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்துக்கும், தனி மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் மது, புகையிலை, குளிர்பானங்கள், துரித உணவுகள் உள்ளிட்டவைகள் மீது பாவ வரி என்ற பெயரில் பல நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் ஏற்கெனவே அந்த வரி அமலில் உள்ள நிலையில் அதனை 10 சதவீதம் உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய சுகாதார சேவைகள் துறை அமைச்சர் மெஹ்மூத் கியானி கூறும் போது, "பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 பேர் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். சராசரியாக ஒரு நாளில் 298 பேரின் உயிரிழப்புக்கு புகையிலைப் பொருள்கள் காரணமாக உள்ளன. மேலும் நாட்டில் நாள்தோறும் புதிதாக 1,500 இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு நாடுகள் இப்போது புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் பாவத்துக்கான வரி வேகமாக அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானிலும் சிகரெட் மீது விதிக்கப்படும் பாவ வரி 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் சுகாதாரத் துறையில் செலவிடப்படும்" என்றார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close