பாகிஸ்தான் ஊழல் வழக்கில் ஷபாஸ் ஷெரீப் சிறையிலடைப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 11:13 am
shehbaz-sent-to-jail-on-judicial-remand-by-accountability-court

ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் காட் லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரரும், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீப்பும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.  

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வராக பதவி வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவர் மீது குற்றஞ்சாட்டி விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில், ஷபாஸ் ஷெரீப் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.  விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 15ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக ஷபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டபோது, காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 

தற்போது ஷபாஸ் ஷெரீப் லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாகவே போராட்டம் நடைபெறாமல் இருக்க, காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close