பாகிஸ்தானில் முதலீடு: சவூதி சர்ப்ரைஸ் முடிவு!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 05:21 pm
saudi-decided-to-invest-in-pakisthan

பாகிஸ்தானில் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபியா சம்மதம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தப்படுத்தும் வகையில், அந்நிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

"அதன் ஒரு பகுதியாக தற்போது, பாகிஸ்தானில் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் சம்மதம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வந்தால், அதற்கான பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்கா தொடர்ந்து கூறிவருகிறது. இந்த நிலையில் அங்கு தொழில் முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபியா முடிவெடுத்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close