சரப்ஜித் சிங் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது பாக். நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 12:58 pm
sarabjit-singh-s-killers-walk-free-as-pakistan-court-acquits-two-in-murder-case

பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானின் லாகூர் சிறையில் இருந்த இந்தியர் சரப்ஜித் சிங்கை கடந்த 2013ம் ஆண்டு கொலை செய்த 2 பேரை பாகிஸ்தான் நீதிமன்றம் சனிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் சிக்கியவர் இந்தியர் சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் மரண தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2013ம் ஆண்டு, சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார். சரப்ஜித் சிங் கொலை தொடர்பாக அமீர் தாம்பா, முடாசர் ஆகிய 2 பாகிஸ்தான் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, லாகூர் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. ஆனால் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு சாட்சியைக்கூட பாகிஸ்தான் அரசு ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து அமீர் டம்பா, முடாசர் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முகமது மொயின் கோக்கார் நேற்று தீர்ப்பு அளித்தார்.

லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையில் இருந்தபடியே அமிர் தாம்பா, முடாஸர் ஆகிய இருவரும் விடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டனர்.

சரப்ஜித் சிங் கொலை தொடர்பான வழக்கில் லாகூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும், சரப்ஜித் சிங்கை கொலை செய்ததை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close