பாகிஸ்தானில் அவதியுறும் இந்திய தூதர்கள்: சமையல் எரிவாயு இணைப்பு கிடைப்பதில்கூட தாமதம்

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 01:40 pm
indian-diplomats-faced-harassed-in-pakistan

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அண்மையில் திறந்து வைத்தார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும்  நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான தனது கோரமுகத்தை பாகிஸ்தான் ஏதாவதொரு விதத்தில் காட்டி கொண்டுதான் உள்ளது.

தற்போது, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதர்களின் வீடுகளுக்கு  சமையல் எரிவாயு இணைப்பை வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்வது, இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளின் இன்டர்நெட் இணைப்பை துண்டிப்பது என பல்வேறு விதங்களில் இந்திய தூதரக அதிகாரிகள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அத்துடன், அலுவல் ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரிகளும், பாகிஸ்தான் உளவு அமைப்புகளின்  பல்வேறு கேள்விகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய தூதர்களின் வீடுகளுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைய முயற்சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்றுதான் வருகின்றன. இந்த பிரச்னைகள் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close