பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறை!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 04:23 pm
nawaz-sharif-sentenced-to-7-years-in-prison

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில், ஷெரிப் குற்றவாளி என நிரூபணமானதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவியில் இருந்து விலகுமாறு அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டது.. அவர் நாடாளுமன்ற தேர்தல்களில் நிற்கவும் நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அதிகார துஷ்ப்ரயோக குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஷெரிப் மீது 3 வழக்குகள் நடைபெற்று வந்தன. இவற்றை விசாரிக்க, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அவென்பீல்டு சொத்து, ஃபிளாக்ஷிப் முதலீடு, மற்றும் அல்-அஸீஸியா ஸ்டீல் மில்ஸ் ஆகிய 3 வழக்குகளையும் உச்ச நீதிமன்ற ஆணைப்படில், அதிகார துஷ்ப்ரயோக குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்றம் விசாரித்து வந்தது. முன்னதாக கடந்த ஜூலை மாதம், அவென்பீல்டு வழக்கில், ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகள் மர்யமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. விசாரணைக்கான கால அவகாசத்தை பலமுறை நீட்டித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 24ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடைசி தவணை வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த வாரம் நடைபெற்ற இறுதி விசாரணைக்கு பிறகு,  தீர்ப்பு வழங்க உள்ள தேதி (24.12.2018)அறிவிக்கப்பட்டு வழக்கு, அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி, அல்-அஸீஸியா மில் தொடர்பான வழக்கில், ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 175 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார். ஃபிளாக்ஷிப் முதலீடு வழக்கில், ஷெரிப் குற்றவாளியல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close