பாகிஸ்தானில் நீதிபதியான ஹிந்து பெண்!...

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 12:46 pm
hindu-woman-bocome-a-civil-judge-in-pakistan

பாகிஸ்தானில் ஹிந்து பெண் ஒருவர் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நாட்டில் ஹிந்து ஒருவர் நீதிபதியாக வருவது இதுவே முதல்முறையாகும்.

காம்பார் சதாகோட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுமன் குமாரி. ஹிந்து பெண்ணான இவர், நீதித்துறை அதிகாரிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து, சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதில் வழக்கறிஞருக்கான படிப்பை சுமன் குமாரி படித்து முடித்தார். அதற்கு முன்பு கராச்சியில் உள்ள சாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டத்தை அவர் பெற்றார்.

சட்டப்படிப்பை முடித்த பின்னர், மூத்த வழக்கறிஞர் ரஷீத் ஏ.ராஸ்வியின் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார். ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்பதே சுமன் குமாரியின் விருப்பமாக இருந்தது என்று அவரது தந்தை பவண் குமார் போதன் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close