ஆசியா பிபி விடுதலையை மறுபரிசீலனை செய்ய முடியாது - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 07:17 pm
pakistan-supreme-court-refuses-to-reviewers-asia-bibi-case

இஸ்லாமிய மதத்தை பற்றி தவறாக பேசியதாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பிபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின், விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பிபி, இஸ்லாமிய மதத்தைப் பற்றி தவறாக பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அந்நாட்டின் சட்டப்படி, இஸ்லாமிய மதத்தை பற்றி தவறாக பேசினால், மரண தண்டனை என்பதால், கீழ் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டில், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததை குறிப்பிட்டு, அவரை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு பாகிஸ்தான் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் "என்ன காரணத்திற்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும்?" என கேள்வியெழுப்பியது. அவர் மதத்தை பற்றி தவறாக பேசியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றவாளி இல்லையென என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், "தவறு செய்யாத ஒருவருக்கு எப்படி தண்டனை கொடுப்பது?" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close