இந்தியரை கொலை செய்த பாகிஸ்தானுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை: துபாய் நீதிமன்றம் தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 01:49 pm
pak-man-gets-7-year-in-jail-for-stabbing-to-death-indian-roommate-in-dubai

துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவரை கொலை செய்த பாகிஸ்தானிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இருவர் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த 2018 அக்டோபர் மாதம் 31ம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானி நபர் மது போதையில் வீட்டிற்கு வந்து, தூங்கி கொண்டிருந்த 3 பேரையும் எழுப்பி தொந்தரவு செய்துள்ளார். மேலும், அவர்களை தூங்கவிடாமல் சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபத்தில் இந்தியர் உள்பட மூவரும் அவரை திட்டியுள்ளனர். அவரும் கோபத்தில் பேசவே, அவரை அடித்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த பாகிஸ்தானி, இந்தியரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த இந்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த வழக்கின் விசாரணை துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close