பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Feb, 2019 12:42 pm
pakistan-foreign-ministry-s-website-hacked

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானிலிருந்து இந்த இணையதளம் எந்த பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது.

ஆனால் ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்கள், தங்களால் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் என்றார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய ஹேக்கர்கள் இதனை செய்திருக்கலாம் எனவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close