27 ராணுவத்தினரை பலிகொண்ட ஈரான் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானியர்: ஈரான்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 04:57 am
pakistani-identified-as-iran-bombing-dentist

ஈரான் -  பாகிஸ்தான் எல்லையில், கடந்த வாரம் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 27 ஈரான் ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்  - ஈரான் இடையே உள்ள பதற்றமான எல்லைப்பகுதியில், தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை ஈரான் சாட்டி .வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ஈரானில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் ஈரான் இராணுவ வீரர்கள் 27 பேர் கொல்லப்பட்டனர்.

தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்திய நபர், பாகிஸ்தானை சேர்ந்தவர் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த மற்றொருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஈரானிலுள்ள சன்னி முஸ்லிம் சிறுபான்மையினரை வன்முறைக்கு சவுதி அரேபியா தூண்டுவதாகவும் ஈரான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இது குறித்து பேசிய ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் ஹோசெயின் சலாமி, "இன்று சவுதி அரேபியா தான், மத்திய கிழக்கிலும், உலக அளவிலும் தீய சக்தியாக விளங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close