மசூத் ஆஸாருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருகிறது பிரான்ஸ்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 09:44 am
france-plans-to-move-resolution-against-masood-azar-in-un

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா.வில் பிரான்ஸ் கொண்டு வரவுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், பதான்கோடில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பாகும். அந்த அமைப்பின் தலைவர் மசூத் ஆஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க, ஐ.நா.வில் இந்தியா பலமுறை முயற்சித்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய 5 வல்லரசு நாடுகளில், ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட, ஐ.நா.வில் எந்தவொரு தீர்மானம் வெற்றி பெறாது. இந்நிலையில், மசூத் ஆஸாருக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானத்துக்கும் சீனா முட்டுக்கட்டை போட்டது. இத்தகைய சூழலில், மசூத் ஆஸாருக்கு எதிராக மீண்டும் ஒருமுறை ஐ.நா.வில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் ஸியாக்லர் இத்தகவலை தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close