இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்க இம்ரான்கான் உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Feb, 2019 04:36 pm
imran-khan-s-message-to-pak-army-against-indian-aggression

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் என்று அந்நாட்டு ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ் -இ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.

துணை ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடனான பேச்சவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு விரும்புகிறது என்று கூறினார். ஆனால் பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா எதாவது நடவடிக்கையை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close