பாகிஸ்தான் வீராப்பு... இந்தியாவுடனான ரயில் சேவையை நிறுத்திக் கொள்கிறதாம்!

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 10:29 am
pakistan-on-thursday-suspended-samjhauta-express

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இயக்கப்பட்டு வரும் சம்ஜயுக்தா விரைவு ரயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்துக்குட்பட்ட அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின்  லாகூர் நகருக்கு சம்ஜயுக்தா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு ரயில் என அழைப்படும் இந்த ரயில், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில நாள்களாக ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து, இந்த ரயில் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்த ரயில் சேவையை நிறுத்தும் எண்ணம் எதுவுமில்லை என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close