அபிநந்தனை விடுவிப்பதற்கு ஐநா தலைவர் வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 03:05 am
un-chief-welcome-pakistan-s-move-of-releasing-abhinandan

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவிக்க முடிவெடுத்ததற்கு ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டிரெஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற வான்வழி தாக்குதலில், பாகிஸ்தானின் F16 போர்விமானமும், இந்திய விமானப்படையின் மிக 21 போர்விமானமும் வீழ்ந்தன. மிக 21 விமானி, விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில், விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. 

சர்வதேச அளவில் இந்தியா கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அவரை விடுவிக்க முடிவெடுத்துள்ளது. அபிநந்தனை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது, என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டிரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குட்டிரெஸின் செய்தித் தொடர்பாளர் டுஜரிச் பேசியபோது, இந்திய விமானியை பாகிஸ்தான் விடுவிக்க முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றமான சூழலை தணிக்க, இரண்டு தரப்பும் போதிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். பல தரப்பில் இருந்து நாங்களும் அதற்கான முயற்சியை தான் எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close