பாகிஸ்தான்: ரயிலில் குண்டுவெடித்ததில் 3 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 07:38 pm
pakistan-3-dead-in-train-bomb-blast

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் குண்டுவெடித்ததில் 3 பேர் பலியாகினர்; 6 பேர் காயமடைந்தனர். ரயிலின் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

பலுசிஸ்தானின் நசிராபாத் வழியாக சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில், பயணிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சில சமூக விரோதிகள், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெஷாவரிலிருந்து, குவெட்டா வரை செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ், பலுசிஸ்தானின் டெரா முரத் ஜமாலி என்ற ரயில் நிலையத்தின் அருகே வந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close