பாகிஸ்தானில் காய்கறி சந்தையில் குண்டுவெடிப்பு - 14 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 11:26 am
bomb-blast-in-pakistan-16-killed

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காய்கறி சந்தையில் இன்று காலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் பலத்த காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் தலைநகர் குவாட்டாவில் உள்ள இந்தச் சந்தையில், ஹஸாரா சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், சந்தைக்கு அருகில் உள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். 

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பலூசிஸ்தான் மாகாண முதல்வர் ஜாம் கமல் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close