இந்திய மீனவா்கள் 100 பேரை பாகிஸ்தான் விடுவித்தது

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Apr, 2019 02:34 pm
pakistan-releases-100-indian-fishermen

பாகிஸ்தான் நாட்டின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, குஜராத் மாநிலத்தை சேர்ந்த, 100 மீனவர்கள் நாடு திரும்பினர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடித்த போது, தவறுதலாக, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்தனர்.

அவர்கள், பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதாக, பாகிஸ்தான் அரசு, சமீபத்தில் அறிவித்தது. கடந்த 17 மாதங்களாக கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்களை பாகிஸ்தான் தற்போது விடுவித்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, 100 மீனவர்கள்,  குஜராத்தில் உள்ள, தங்கள் வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியுள்ள மீனவர்களும், விரைவில் விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close