பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 05:21 pm
23-killed-as-thunderstorms-dust-storm-lash-pakistan

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 23 பேர் உயிாிழந்துள்ளனா்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  மழையுடன் புழுதி புயலும் ஆங்காங்கே வீசி வருகிறது.  

இதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன. இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  

இதில் 2 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.  கைபர் பக்துண்குவா மாகாணத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் உயிாிழந்துள்ளனா்.

இதேபோன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினை அடுத்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர்.  இங்கு குழந்தை உள்பட 9 பேர் உயிாிழந்துள்ளனா்.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள புழுதி புயலில் சிக்கிய 4 மீனவர்களை இதுவரைக் காணவில்லை.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close