லாகூர் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் பலி; 25 பேர் படுகாயம்!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 11:39 am
eight-killed-several-injured-in-a-blast-near-a-major-sufi-shrine-in-pakistan-s-lahore

பாகிஸ்தானின் லாகூர் அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம்  நிகழ்ந்ததில், 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . 

பாகிஸ்தான் லாகூரில் இருந்த பஞ்சாப் எல்லை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும், பிரபல மசூதி தாதா தர்பார்(Data Darbar) அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,  25க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலை பஞ்சாப் காவல்துறை ஐ.ஜி ஆரிப் நவாஸ் கான் உறுதி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுளளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close