பாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 24 May, 2019 05:52 pm
one-killed-several-injured-in-a-blast-in-pakistan

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பஸ்துனாபாத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.

அப்போது மசூதி அருகே வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close