பாகிஸ்தான்- லாரி மீது வேன் மோதி 13 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 11:29 am
13-killed-in-van-truck-collision-in-pakistan

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று இரவு குவெட்டாவிலிருந்து சோப் என்ற இடத்திற்கு ஒரு வேனில் 20 பேர் பயணம்  மேற்கொண்டிருந்தனர்.

அலிகேல் என்ற இடத்தின் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த 4 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close