இந்தியாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் பாகிஸ்தான்... விமானி அபிநந்தனை கேலி செய்து வீடியோ வெளியீடு!

  கிரிதரன்   | Last Modified : 11 Jun, 2019 10:10 pm
world-cup-cricket-pakistan-ad-mocks-abhinandan-varthaman-s-capture-to-publicise-clash-against-india

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்வைத்து, இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை கேலி செய்து, பாகிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் , மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் வரும் 16 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியையொட்டி, பாகிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்காட்சியான "ஜாஸ்" டிவியில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. 33 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் போல வேடமிட்டு, ஆனால் அவரது ராணுவ சீருடைக்கு பதிலாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் நீலநிற சட்டை போன்ற ஆடையை அணிந்த ஒரு நபர் தோன்றுகிறார்.

அதில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவரிடம், "  டாஸில் வெற்றி பெற்றால், இந்திய அணியின் முடிவு என்னவாக இருக்கும்?" என கேள்வியெழுப்புவது போலவும், அதற்கு அந்த நபர், "மன்னிக்கவும்...அதனை நான் உங்களிடம் சொல்ல முடியாது" என பதிலளிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அபிநந்தன் போல வேடமிட்ட நபரை, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சட்டையை பிடித்து பின்னால் இழுத்து, "எங்க போற...வேர்ல்டுகப்பை தூக்கிட்டு போயிடலாம்னு பாக்குறியா?...கொஞ்சம் பொறு" என சொல்வது போன்ற சித்தரிப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவரிடம் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிகழ்வுகளை மையமாக வைத்து, அபிநந்தனை கேலி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம், சர்வதேச அரங்கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், பாகிஸ்தான் வசம் சிக்கிய அபிநந்தன், மத்திய அரசு எடுத்த பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் இரண்டே நாட்களில் மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.

அதேபோன்று, உலகக்கோப்பை போட்டியில் இம்முறையும் பாகிஸ்தானை வெல்வதுடன், கோப்பையையும் இந்தியா தான் வெல்லும் என்பதை, ஜாஸ் டிவியின் விளம்பரம் சொல்லாமல் சொல்கிறது. அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியடையும் என்பதை அந்த நாட்டு ஊடகமே மறைமுக சொல்லியுள்ளது எனவும் நாம் பொருள் கொள்ளலாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close