சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை!

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2019 05:26 pm
pakistan-releases-terrorist-and-26-11-mastermind-hafiz-saeed

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். 

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஜாமத் -உத் -தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்த சூழ்நிலையில் தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க இருந்த நிலையில், ஹபீஸ் சயீத்தின் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்தியாவில் நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் இருந்து ஹபீஸ் சையத் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம், இந்தியாவுடன் நேரடியாக மோத முடியாத பாகிஸ்தான் ஹபீஸ் சயீத்தின் மூலமாக மறைமுகமாக இந்தியாவுடன் மோதுகிறது என்றே கூறலாம். மேலும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது என்பதும் இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close