இந்தியாவுடன் போர் புரிய தயார் : இம்ரான் கான் ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 09:40 pm
ready-for-war-with-india-imran-khan

''காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் புரியவும் தயாராக உள்ளது'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசினார். 

பாக்கிஸ்தான் சுதந்திர தினமான இன்று அந்நாட்டு மக்களிடம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: "காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட்டு தீர்வு கிடைக்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்பியது. அது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் பேசினேன். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா அவசரப்பட்டுவிட்டது.

காஷ்மீர் மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாகிஸ்தான் என்றும் உறுதுணையாக இருக்கும். இது தொடர்பாக இந்தியாவுடன் போர் புரியும் சூழல் வந்தாலும் நாம் தயார்'' இவ்வாறு அவர் பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close