ஆப்கான் போராளிகளை தீவிரவாதிகள் என்பதா? இம்ரான் கான் கொதிப்பு 

  அபிநயா   | Last Modified : 13 Sep, 2019 03:03 pm
mujahideens-are-not-terrorists-imran-khan

ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள முஜாஹிதீன் படையினரை தீவிரவாதிகள் என அமெரிக்கா கூறியிருப்பதற்கு, பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "1980 ல் சோவியத் தாக்குதலுக்கு எதிரான புனித போருக்காகவே முஜாஹிதீன்ஸ்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்தோம். அமெரிக்கா அதற்கு நிதியுதவி செய்தது. ஆனால் இப்போது, தலிபானுக்கு எதிரான  அமெரிக்க தாக்குதலின் போது, இதே  முஜாஹிதீன்ஸ்களை தீவிரவாதிகள் எனக் கூறுவது சரியில்லை.

ஆப்கானிஸ்தான் - அமெரிக்கா விவகாரத்தில், பாகிஸ்தான்  நுழையாதிருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், 70,000 மக்களின் உயிர்களும், 100 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்காது. இத்தனை இழப்பிற்குப்பின், இப்போது அனைவரும் எங்களுக்கு எதிராக பேசுவது மிகுந்த வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார். 
முன்னதாக தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு, பத்தி தரும் வகையில் இம்ரான் கான் பேசியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close