தலீபான் என்றாலே பாகிஸ்தான் நாட்டின் நினைவுதான் வருகிறது என ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது

  அபிநயா   | Last Modified : 03 Oct, 2019 01:11 pm
taliban-are-proxy-of-pakistan-and-its-intelligence-agency-says-afghan-nsa

தலீபான்கள் என்றாலே பாகிஸ்தான் அரசின் நினைவு தான் வருகிறது எனவும் அந்த அளவிற்கு தலீபான்களுடன் பாகிஸ்தான் அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரிவு ஆலோசகர் ஹம்துல்லா லோஹிப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு மாநாட்டில் பங்கு பெற்ற ஹம்துல்லா லோஹிப், "தாலிபான் பாகிஸ்தான் இரண்டும் ஒரே பொருளை தான் குறிக்கின்றன எனத் தோன்றும் நிலை வந்து விட்டது. சோவியத்தின் ஆட்சியையே ஏற்க மறுத்த ஆப்கானிஸ்தான், தன் நாட்டு மக்களையே பாதுகாக்க இயலாமல் நிற்கும் பாகிஸ்தானை எந்த நிலையிலும் தங்கள் நாட்டை ஆள அனுமதிக்காது" எனக் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close