இனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்!!

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 03:59 pm
being-on-fatf-grey-list-a-setback-for-any-nation-pressure-is-on-pak-army-chief-bipin-rawat

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பில், பாகிஸ்தானிற்கு, 4 மாத கால அவகாசத்துடன் சாம்பல் நிறப்பட்டியலில் தொடர அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, பாகிஸ்தான் வேகமாக செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய ராணுவ கேப்டன் பிபின் ராவத்.

சர்வதேச நிதியத்தின் கீழ் வரும் இந்த பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து வருவதாகவும், முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானை, இனி இந்த செயல்களில் ஈடுபடாமல் இருக்கும்படி அறிவறுத்தி, சாம்பல் நிறபட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், பாகிஸ்தான் அதை செய்ய தவறியதால், கருப்புப் பட்டியலில் வைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 13 முதல் 18 வரை பாரிஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பில், 4 மாத கால அவகாசத்துடன் சாம்பல் நிறபட்டியலில் பாகிஸ்தான் தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த 4 மாத கால அவகாசத்திற்கு பின்னரும், பாகிஸ்தான், அதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை சரிசெய்ய தவறினால், கருப்பு நிறபட்டியலில் நிச்சயமாக வைக்கப்படும் எனவும், சர்வதேச பொருளாதார வங்கிகள் எதிலிருந்தும் நிதியுதவிகள் பெற இயலாது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய ராணுவ கேப்டன் பிபின் ராவத், "தற்காலிகமாக கருப்புப் பட்டியலில் இருந்து தப்பித்திருந்தாலும், சாம்பல் நிறப்பட்டியலும், ஓர் நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவாக தான் கருதப்படும். ஆகையால், இனியும் தாமதிக்காமல், வேகமாக முடிவெடுக்க வேண்டிய சூழலில் தற்போது உள்ளது பாகிஸ்தான்" என்று எச்சரித்துள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close