நவாஸ் ஷரீஃப் உடல்நிலை குறித்து விசாரித்த பாக்., பிரதமர்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 11:34 am
pakistan-pm-imran-khan-directs-punjab-government-to-extend-best-medical-care-to-nawaz-sharif

முன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷரீஃப், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூர் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் உடல்நிலை குறைவால் அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவரின் தற்போதைய நிலை குறித்து பஞ்சாப் அரசிடம் விசாரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ன் தலைவருமான நவாஸ் ஷரீஃப், இரத்தத்தில் காணப்படும் பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவினால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூர் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, அவரின் நிலை குறித்து பஞ்சாப் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

நவாஸ் ஷரீஃபிற்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பஞ்சாப் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவரது உடல்நிலை வேகமாக முன்னேற்றமடைய கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும் கூறியதாக, பாகிஸ்தான் தலைமை பேச்சாளர் ஃபிர்தௌஸ் ஆஷிக் அவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையில், நவாஸ் ஷரீஃபிற்கு சிகிச்சை அளித்து வரும் லாகூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், சாதாரணமாக, சுமார் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்க வேண்டிய பிளேட்லெட்களின் எண்ணிக்கை, ஷரீஃபிற்கு 2,000 மட்டுமே உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக பணியாற்றிய நவாஸ், கடந்த டிசம்பர் 24, 2018 அன்று பனாமா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close