நவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 08:06 pm
nawaz-sharif-gets-bail-on-medical-grounds

முன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷரீஃப், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூர் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் உடல்நிலை குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்க அனுமதி அளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.

மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக பணியாற்றிய நவாஸ் ஷரீஃப், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பனாமா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, தேசிய பொருப்புக்கூறல் பணியகத்தின் விசாரணையில் ஈடுபட்டிருந்த அவருக்கு, தீடீரென, இரத்தத்தில் காணப்படும் பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூர் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

பிளேட்லெட்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையிலும், அபாய கட்டத்தை தாண்டாத இவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இவருக்கு ஜாமீன் வழங்க பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையில், நவாஸ் ஷரீஃபிற்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பஞ்சாப் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவரது உடல்நிலை வேகமாக முன்னேற்றமடைய கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close