பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 12:12 pm
death-toll-rises-to-65-in-incident-where-fire-broke-out-in-tezgam-express-train

பாகிஸ்தானில் தேஸ்காம் விரைவு ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிகை 65 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல் பிண்டி செல்லும் தேஸ்காம் விரைவு ரயில் ரஹீம் யார்கான் பகுதியில் லியாகத்பூரில் அருகே வந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. இச்சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில், ரயிலில் பயணிகள் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் நடைபெற்றபோது, பயணிகள் காலை உணவை சமைத்து கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த மேலும் 2 ரயில் பெட்டிகளிலும் தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close