சிங்கத்திற்கு உணவளித்தவருக்கு நேர்ந்த கதி! பசியால் 5 ஆண்டுகால நட்பு மறந்தது!

  முத்து   | Last Modified : 13 Dec, 2019 07:41 pm
zookeeper-attacked-by-lion

பாகிஸ்தானில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரின் கையை சிங்கம் கடித்துக் குதறியது. 

கராச்சி உயிரியல் பூங்காவில் கானு பிரதித்தா என்பவர்  கடந்த 5 ஆண்டுகளாக ஒரு சிங்கத்தை பராமரித்து வருகிறார். வழக்கம்போல் சிங்கத்திற்கு உணவளித்தப்போது யாரும் எதிர்பாராத விதமாக, கூண்டில் இருந்த சிங்கம் அவரது கையை பலமாக கடித்தது. 

பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அந்த பராமரிப்பாளர் சிங்கத்தின் வாயில் இருந்து கையை மீட்டார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரது கையை சிங்கம் கடித்துக் குதறியதால் பெரும் அளவில் சிதைந்தது. 
சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு பூட்டியிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர் அதனை படம்பிடித்து விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close