முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனை! சிறப்பு கோர்ட் அதிரடி!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 01:35 pm
ex-president-sentenced-to-death-special-court-action

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (76) கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக இருந்த போது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக அதிபர் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு, டிசம்பர் 2013 ல் தொடரப்பட்டது.

 

முன்னாள் அதிபர் முஷாரப் மீது மார்ச் 31, 2014 அன்று குற்றம் சாட்டப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும் தாக்கல் செய்தது. ஆனாலும், தொடர்ந்து மேல்முறையீட்டு மன்றங்களில் வழக்கு காரணமாக முன்னாள் அதிபர் முஷாரப்  வழக்கு நீடித்தது. இந்நிலையில், முஷாரப் கடந்த மார்ச் 2016ல் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர், உடல் நலக்குறைவால் 2016ல் துபாய் சென்ற முஷாரப் அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு இதுவரையில் திரும்பவில்லை. தற்போது துபாயில் உள்ள மருத்துவமனையில் முஷாரப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெஷாவர் ஐகோர்ட்  தலைமை நீதிபதி வக்கார் அஹ்மத் சேத் தலைமையிலான சிறப்பு கோர்ட்டின்  மூன்று பேர் கொண்ட பெஞ்ச்,  பர்வேஸ் முஷாரஃபுக்கு தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close