இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தென் கொரிய அரசின், "சியோல் அமைதி விருது - 2018" அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சியோல்- பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்ற சவுதி: சிறையில் உள்ள 850 இந்தியர்கள் விடுதலை!
இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்- ஐ.நா சபை பொதுச்செயலாளர் வேண்டுகோள்
ஊழல் வழக்கு: மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது
குல்பூஷன் ஜாதவ் வழக்கு: இன்று முதல் விசாரணை
இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்வெளி தொலைநோக்கி!
ரஷ்யா அனுப்பிய விண்வெளி ரேடியோ தொலைநோக்கி தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அதனை சீரமைக்கும் முயற்சியில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்!
ஜிம்பாப்வேயின் மஷோனலாந்து பகுதியில், அணைக்கட்டு உடைந்து தங்க சுரங்கங்கள் நீருக்குள் மூழ்கிய சம்பவத்தில், 60க்கும் மேற்பட்ட சுரங்கப் பணியாளர்கள் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: பாகிஸ்தான்
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் விமான விபத்து- 5 பேர் பலி
கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நைஜிரியா- கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி
நைஜிரியாவின் துறைமுக நகரில் அதிபர் முகமது புகாரியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
அந்தமானில் நிலநடுக்கம்!
அந்தமான் நிகோபார் தீவில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. நேற்று காலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் வான்வழி தாக்குதல்- 70 பேர் பலி
சிரியா நாட்டின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாகினர்.இதனை இஸ்தான்புல் ஆளுநர் அலி ஏர்லிக்யா உறுதி செய்துள்ளார். உள்ளூர் நேரப்படி 18.51 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நியூசிலாந்தில் பயங்கர காட்டுத் தீ- வெளியேறும் மக்கள்
நியூசிலாந்து நெல்சன் நகரில் 6-வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால் 3 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
சவுதி இளவரசர் இந்தியா வருகை
சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19-ஆம் தேதி இந்தியா வரவுள்ளார்.
நைஜீரிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் பலி
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸம்ஃபரா மாகாணத்தில், ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், பல்வேறு கிராமங்களுக்கு தீவைத்து நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியா ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி
சோமாலியா தலைநகரில் உள்ள பிரபல மால் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். சோமாலியாவில் அல்கொய்தா தீவிரவாதிகள் இது போன்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்! 15 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள், போலீசார் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள் 6 பேர் மேலும், தலிபான் பயங்கரவாதிகள் 9 பேரும் பலியாகினர்.
பிரேசில் சுரங்க கழிவு அணை விபத்து; பலி எண்ணிக்கை 110 ஆக உயர்வு
கடந்த வாரம் பிரேசிலின் மினாஸ் ஜெராய்ஸ் பகுதியில், சுரங்க கழிவு அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில், பலியானோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
மகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் !
ஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்!
தேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்?; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு
அருந்ததி இயக்குனர் காலமானார்..!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!