எகிப்து சாலை விபத்து- 26 பேர் பலி; ஆண்டுக்கு 12,000 பேர் உயிரிழக்கும் அபாயம்

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2017 07:21 pm

எகிப்தில் நடந்த இரட்டை சாலை விபத்தில் மூன்று நாட்களில் 26 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று எகிப்தின் கைரோவில் மினி பேருந்து பாலைவன சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், இதே சாலையில் நடந்த விபத்தில் 13 பேர் இறந்தனர்.

2016ம் ஆண்டில் மட்டும் எகிப்தில் 14,700 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், அதில் 5000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எகிப்தில் மோசமான சாலைகள் உள்ளதாகவும், அதனை சீர் செய்து சாலை விதிமுறைகளை வலுப்படுத்தவில்லை என்றால் ஆண்டிற்கு 12,000 பேர் உயிரிழப்பர் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close