பிலிப்பைன்ஸ் 'டெம்பின்' புயலுக்கு 183 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 24 Dec, 2017 12:06 pm


பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உருவாகியுள்ள 'டெம்பின்' புயலால் அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் இதுவரை 180க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெம்பின் புயலால் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால்  ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த் புயலினால் பியாகபோ, துபாட் ஆகிய இரு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய தகவலின்படி, இந்த புயல் பாதிப்பினால் 183 பேர் வரையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close