பிலிப்பைன்ஸில் தீ விபத்து; 37 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 24 Dec, 2017 01:36 pm


தெற்கு  பிலிப்பைன்ஸில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் இதுவரை 37 பேர் வரை பலியாகியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் டாவோ எனும் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று திடீரென தீ பற்றியது. நான்காவது மாடியில் பற்றிய தீ மற்ற தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது வரை இந்த விபத்தில் 37 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட டாவோ நகர், தலைநகர் மணிலாவில் இருந்து 800 கிமீ தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close