உலகின் மிகச்சிறிய இயேசு கிறிஸ்து குடில்!

  Shanthini   | Last Modified : 24 Dec, 2017 07:53 pm


லித்துவேனிய நாட்டின் அதிபர் டாலியா க்ரிபவ்ஸ்காடி (Dalia Grybauskaitė), போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக் கூடிய, உலகின் மிகச் சிறிய இயேசு கிறிஸ்து குடிலை பரிசாக வழங்கியுள்ளார்.

லித்துவேனிய நாட்டின் வில்னியுஸ் ஆலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து குடிலை, பத்தாயிரம் முறைகள் சுருக்கி, இந்தச் சிறிய குடில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த சிறிய குடில் அன்பளிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள லித்துவேனிய அதிபர், "மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக்கூடிய இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு அறிவியலாளரும், மாணவர்களும் மூன்று மாதங்களாக இக்குடிலை அமைத்தனர்" என தெரிவித்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை போப்பாண்டவருக்கு பரிசளிக்கப்பட்ட இது, லிங்க்மெனு பாப்பிரிக்கஸ்  ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள மூன்று சிறிய குடில்களில் ஒன்றாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close