தேர்தலை முன்னிட்டு, ரஷ்ய அரசை விமர்சிக்க தடை

  SRK   | Last Modified : 26 Dec, 2017 10:17 pm


அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ரஷ்ய அதிபர் தேர்தலை முன்னிட்டு, அரசை விமர்சித்து எதிர்க்கட்சிகள் போஸ்டர்கள் அச்சடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அதிபர் விளாடிமிர் புடின் 4வது முறையாக அதிபராக போட்டியிடுகிறார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தாலும், அவரை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன. ஏற்கனவே இரண்டு எதிர்க்கட்சிகள் அவரை எதிர்த்து போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸெய் நவால்னி என்ற சுயேச்சை வேட்பாளர், தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை கூறி, வரும் தேர்தலையும், அதன் முடிவுகளையும் புறக்கணிக்க ரஷ்ய மக்களுக்கு நவால்னி அழைப்பு விடுத்து வருகிறார். புடின் தலைமையிலான அரசை எதிர்த்து போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் நவால்னி. இந்நிலையில் ரஷ்ய அரசுக்கு எதிராகவும், அரசை விமர்சித்தும் போஸ்டர்கள் அச்சடிக்க தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close