ஐக்கிய அரபு அமீரகம்: தாய் இறந்த செய்தி கேட்டு உயிரிழந்த மகன்

  நந்தினி   | Last Modified : 30 Dec, 2017 07:22 pm


தாய் இறந்தவிட்டதாக சொன்ன செய்தியை கேட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் கேரளாவை பூர்விகமாக கொண்ட அனில் குமார் கோபிநாதன். இவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல்-குவானில் உள்ள டெய்லர் கடையில் 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமையன்று அனில் குமாருக்கு, அவரது தாய் கேரளாவில் இறந்தவிட்டதாக தகவல் அனுப்பியுள்ளனர். அன்றிரவு அனில் குமாரின் சகோதரர் சந்தோஷ், துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறினார். மறுநாள் அனில் குமார், இந்தியாவுக்கு செல்ல இருந்தார். 

ஆனால், மறுநாள் ரூமில் அனில் குமார் மயக்கமடைந்து இருந்ததை, அவரது நண்பர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன் பிறகு, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கோபிநாதனின் உடல் கேரளாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தாய் கவுசல்யா இறந்த சோகத்தில் குடும்பம் இருக்கும் சமயத்தில், மகனும் இறந்துள்ள சம்பவம் நண்பர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. அவர்கள் தெரிவிக்கையில், அனில் குமாரின் மனைவி மொல்லி மற்றும் மகள் அதிரா, அவரது வருகைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், வரப்போவது அவரது உடல் மட்டும் தான் என்று அறிந்தால் அவர்கள் நிலைமை என்னவாகும் என்று வருந்தினர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.