நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எகிப்தில் 1981-2011 காலகட்டங்களில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்தவர் ஹோஸ்னி முபாரக். அவருக்கு பிறகு 2011ல் மோர்சி அதிபராக பதவியேற்றார். ஓராண்டுக்குள்ளாகவே அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, மோர்சி மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. மேலும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால் முகமது மோர்சிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் மோர்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.