கென்யா சாலை விபத்தில் 30 பேர் பலி

  Shanthini   | Last Modified : 31 Dec, 2017 06:13 pm


கென்யா நாட்டில் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 30 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நகுரு நகர் அருகில் நகுரு -எல்டோரெட் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை புசியாவிலிருந்து சென்று கொண்டிருந்த பஸ், நகுருவிலிருந்து வந்து கொண்டிருந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 30 பேர் பலியாகியுள்ளனர், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஸ் முழுமையாக சேதம் அடைந்துள்ளது என போலீஸ் தரப்பு கூறியுள்ளது. 

இந்த விபத்தில் இரு வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பலியானவர்களில் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்கும். இதே நெடுஞ்சாலையில் இந்த மாதத்தில் மட்டும் நடந்த விபத்துகளில் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பயணி ஒருவர் விபத்து குறித்து பேசும் போது, "நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது மிகப்பெரிய சப்தம் கேட்டது, உடனே நாலாப்பக்கமும் அழுகையும் ஓலமும் கேட்டது. நான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தேன். என் கால்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தது. பின்னர் மீட்கப்பட்டேன். பலரின் உடல்கள் சிதைந்து இருந்ததைக் கண்ணால் பார்த்தபோது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டது” என்றார்.

கென்யாவில் ஆண்டுக்கு 3,000 பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close