ஆற்றில் விழுந்த விமானம், 6 பேர் பலி

  Shanthini   | Last Modified : 31 Dec, 2017 09:03 pm


ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னி அருகே நடந்த விமான விபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா பயணிகள், 11 வயது சிறுவன், பைலட் (விமான ஓட்டி) உட்பட 6 பேர் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சிட்னியிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள ஹாக்ஸ்பரி என்ற ஆற்றில் வீழ்ந்த கடல் விமானம், ‘சிட்னி சீபிளைன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கான பிரத்யேக விமானங்களை அளித்து வருகின்றது. 

இவ்விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்பட முடியாத சூழ்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 43 அடி ஆழத்திலிருந்து 6 பேரின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். விமானம் முற்றிலும் வலதுப்புறமாக வளைந்த நிலையில் தண்ணீரில் விழுந்ததாக விபத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ஆஸ்திரேலிய உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்பில் இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அவ்விமான நிறுவனம் கூறுகையில், “இந்த சம்பவம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கின்றது. பலியான பயணிகள் மற்றும் விமான ஓட்டியின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களை பகிர்கின்றோம்” என தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close