இந்தோனேஷியா: படகு கவிழ்ந்ததில் 8 பேர் பலி, பலர் மாயம்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 2018 04:01 pm


இந்தோனேஷியாவின் தஞ்சுங் டவுனில் இருந்து 48 பயணிகளுடன் படகு ஒன்று தரகன் நகரத்துக்கு இன்று சென்றது. களிமண்டன் என்ற தீவை நெருங்கிய சமயம், திடீரென கடலில் படகு கவிழ்ந்தது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 33 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்த மேலும் சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். படகு கவிழ்ந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

17,000 தீவுகளை கொண்ட இந்தோனேஷியாவில் நடக்கும் படகு விபத்துக்கள் ஏராளம்.  கடந்த ஜூலை மாதம் இதே பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில், 8 பேர் மூழ்கடிக்கப்பட்டனர். புதுவருடமான இதே  நாளில் கடந்த ஆண்டு, 23 பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். வருட பிறப்பை கொண்டாட இந்தோனேஷியா மக்கள் திடுங் தீவுக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close