நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

  Shanthini   | Last Modified : 02 Jan, 2018 01:48 pm


நைஜீரியாவில் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பியவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 14 பேர் பலியாகியுள்ளனர்.

ரிவர்ஸ் ஸ்டேட் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு அங்குள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒரு குழுவினர் நள்ளிரவு வீடு திரும்பியபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரிவர்ஸ் ஸ்டேட் பிராந்தியம் எண்ணெய் வளம் மிக்க பகுதி. ஆனால் அங்கு வறுமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிராந்தியம் பல்வேறு ஆயுதக் குழுக்களின் புகலிடமாகவும் இருக்கின்றது. இதனால் அங்கு இவ்வாறான சமூகவிரோத தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close