ரயில் - லாரி மோதி பெரும் விபத்து: 18 பேர் பலி

  SRK   | Last Modified : 05 Jan, 2018 02:41 am


தென்னாப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று, லாரியின் மீது மோதி தடம்புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர்; 260 பேர் காயமடைந்தனர். 

போர்ட் எலிசபெத்தில் இருந்து ஜொஹான்னஸ்பர்க் நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த பயணிகள் ரயிலில் மொத்தம் 429 பயணிகள் இருந்தனர். ப்ரீஸ்டேட் மாகாணத்தில் ரயில் சென்றுகொண்டிருந்த போது, ஒரு லாரி ஓட்டுநர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். ரயில் வருவதை பார்த்தும்கூட, அது நெருங்குவதற்குள் தண்டவாளத்தை தாண்டிவிடலாம் என நினைத்து அவர் ஆபத்தான நேரத்தில் கடந்துள்ளார். 

வேகமாக வந்த ரயில், லாரியின் மீது மோதியதில் தடம் புரண்டு தீ பற்றியது. ரயில் பெட்டிகளில் சிக்கிக் கொண்ட பயணிகளில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 260 பேர் காயமடைந்தனர். தண்டவாளத்தை கடந்த போது, அந்த லாரியின் பின்னால் இரண்டு கேரவேன்கள் இணைக்கப் பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"அந்த லாரி ட்ரைவர் கடும் ரிஸ்க் எடுத்து தண்டவாளத்தை கடந்துள்ளார்" என தென்னாப்பிரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோ மஸ்வங்கனி தெரிவித்தார். லாரி, பின்னால் இருந்த கேரவேன்கள் பாதி தூரம் கடந்த போதே ரயில் மோதி, அதை சுமார் 400 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், விபத்துக்கு காரணமான லாரி ட்ரைவர், ஒரு காயம் கூட இல்லாமல் தப்பித்து விட்டார் . ரயில் ஓட்டுனரும் உதவியாளரும் சிறு காயங்களுடன் தப்பித்து விட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close